in

9 மாதங்களில் 3712 புகார்கள்….இணைய வழியே 35 கோடி ரூபாய் மோசடி… 9 கோடி பறிமுதல்..

9 மாதங்களில் 3712 புகார்கள்….இணைய வழியே 35 கோடி ரூபாய் மோசடி…
9 கோடி பறிமுதல்..

 

வங்கி அதிகாரிகளின் விழிப்புணர்வால் மோசடிக்கு முன்பே ஒரு கோடியை மடக்கிய சைபர் கிரைம் போலீசார்…

புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களில் 250 பேர் தங்களது மொபைல் போனை தவறவிட்டனர். இவற்றை சைபர் கிரைம் போலீசார் நிறைந்து செயல்பட்டு 60 லட்ச ரூபாய் மதிப்பிலான ஃபோன்களை கண்டுபிடித்து முதியோரிடம் இன்று ஒப்படைத்தனர்.

ஒரு செய்தியாளர்களை சந்தித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன்,இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை இணைய வழியில் 3712 பேர் 35 கோடியே 17 லட்சம் ரூபாய் இழந்ததாக புகார் கொடுத்துள்ளனர்.

இதில் ஒன்பது லட்சம் ரூபாயை நேரத்துக்குள் மீட்கப்பட்டது என்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தின் கீழ் சைபர் கிரைமில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனைத்து வழக்குகளும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களுக்கு தெரிந்த முன்னாள் காதலர், முன்னாள் கணவர்கள் தான் என்றும் குறிப்பிட்டார்.

Fedex கொரியர் மூலம் போதைப் பொருள் கிடைத்ததாக பொய் புகார் குறி மிரட்டிய வகையில் புதுச்சேரி சேர்ந்த பால்பாண்டி என்பவர் இணைய வழி மோசடி நபர்களின் செய்து தூண்டுதலின் பெயரில் 75 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்த சென்றார். வங்கி மேலாளரின் விழிப்புணர்வால் சைபர் கிரைம் போலீசருக்கு தகவல் வர அந்தப் பணம் மீட்கப்பட்டது. இதே போல் ஷேர் மார்க்கெட் சிக்கி 45 லட்ச ரூபாய் வங்கி செலுத்த சென்றவர் குறித்து வங்கி மேலாளர் அறிவுறுத்த உடனடியாக அந்த பணமும் மீட்கப்பட்டது என கலைவாணன் தெரிவித்தார்.

சைபர் குற்றவாளிகள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர். டிஜிட்டல் கைது என்ற புதிய முறையில் அச்சுறுத்த துவங்கி உள்ளனர். இணைய வழியில் மோசடியில் சிக்குபவரை வீடியோ எடுத்து மும்பை சைபர் கிரைம் உங்களை கைது செய்துள்ளது.

நீங்கள் “ டிஜிட்டல் கைதி” உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும் என கூறி பணத்தை கறக்கின்றனர். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. எந்த ஒரு சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கேட்டுக்கொண்டார்.

What do you think?

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்படும்… முதலமைச்சர் ரங்கசாமி