in

முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம்

 

முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கழக அவைத் தலைவர் இரா. ஜீவானந்தம் எம்ஜிஆரின் திருஉருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புரட்சித்தலைவி அம்மா மாளிகை அருகில் உள்ள எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு முன்னாள் அமைச்சரும் கழக அவை தலைவரும் மான இரா. ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் புரட்சித்தலைவி அம்மா மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் நாகை நகர கழகச் செயலாளர் தங்க. கதிரவன்
உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

What do you think?

மயூரநாதர் ஆலயத்தில் அதிகாலை நடைபெற்ற திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி

10.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்பாட்டம்