in

சிவகங்கையில் 3வது புத்தக கண்காட்சி


Watch – YouTube Click

சிவகங்கையில் 3வது புத்தக கண்காட்சி

 

சிவகங்கையில் நடைபெற்று வரும் 3வது புத்தக கண்காட்சியில் காவல்துறையினர் குடும்பத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது புத்தக கண்காட்சியில் 4வது நாளான இன்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் புத்தக கண்காட்சிக்கு வந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளை பார்வையிட்டு கலை, இலக்கியம், அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாங்கி சென்றனர்.

இது தவிர ஏராளமான பள்ளி, மாணவ மாணவிகள் புத்தக கண்காட்சியை கண்டு
புத்தகங்களைவாங்கிச் சென்றனர். பின்னர் நடைபெற்ற விழாவில் காவல்துறை அதிகாரிகள் மாணவர்கள் மத்தியில் புத்தகம் படிப்பதின் அவசியத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பற்றி எடுத்தரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை பயிற்சி ஏ எஸ் பி ஆசிக் ஜோஷி, சிவகங்கை டி. எஸ் பி . டிஎஸ்பி சிபி சௌந்தர்யன், சிவகங்கை நகர காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி மற்றும் ஏராளமான காவல் துறையினர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

காவல் நிலையங்களில் பற்கள் பிடுங்கிய வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

குடியுரிமை திருத்த CAA சட்டம் எடப்பாடி அந்தர் பல்டி