டீ கடை உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது
நிலக்கோட்டை அருகே டீ கடை உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது. கடையில் இருந்த பொருட்களை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் வயது 55. இவர் முசுவனூத்து பிரிவில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவர் டீக்கடையில் இவரது தம்பி மாயாண்டி டீ குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த பாண்டியராஜன் மாயாண்டியிடம் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவருக்கொருவர் வாய் தவறாக ஏற்படவே சந்திரன் இருவரையும் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
பின்னர் சிறிது நேரத்திற்கு பின்பு டீக்கடைக்கு வந்த பாண்டியராஜன், பாண்டியராஜனின் உறவினர்கள் முரளிசங்கர், தமிழன், விக்னேஸ்வரன் ஆகிய 4 பேர்களும் சமரசம் பேசி வைக்க கூடிய அளவுக்கு நீ பெரிய ஆளா என்று சந்திரனை வீண் தகராறு செய்து சந்திரனையும், சந்திரன் தம்பி மகன் பாலகிருஷ்ணனையும் கடுமையாக தாக்கியும், கடையில் இருந்த கண்ணாடி பொருட்களை உடைத்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த 2 பேர்களும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் படி விக்னேஸ்வரன் வயது 27, தமிழன் வயது 57, முரளி சங்கர் வயது 24, பாண்டியராஜன் வயது 45 ஆகிய 4 பேர்கள் மீதும் வழக்கு பதிவு 4 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தி பின்னர் 4 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
டீக்கடையில் கண்ணாடிப் பொருட்களை அடித்து நொறுக்கியும், டீக்கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.