in

புதுச்சேரியில் 23 ஐம்பொன் சிலை திருட்டு 4 குற்றவாளிகள் கைது

புதுச்சேரியில் 23 ஐம்பொன் சிலை திருட்டு 4 குற்றவாளிகள் கைது

 

புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 17வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் ( 69), சிலை வடிக்கும் சிற்பி.

இவர் தான் செய்யும் சிலைகளை வீட்டின் அருகே கடை ஒன்றை அமைத்து அதில் விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த 2ந் தேதி அவர் செய்து வைத்திருந்த 2 பெரிய ஐம்பொன் சிலைகள் மற்றும் 21 சிறிய சிலைகள் என 23 சிலைகள் காணாமல் போனது.
இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசங்கரன் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் வெங்கடாசலபதி, உதவி ஆய்வாளர் பாட்ஷா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது சிவசங்கரன் கடை முன்பு உள்ள மரத்தடியில் சில நாட்களாக லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த குப்பை பொறுக்கும் தொழிலாளியான அலெக்ஸ் (வயது 22) தினமும் குப்பைகளை சேகரித்து கொண்டு செல்வது வழக்கம்.

இதனால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக சிவசங்கரன் கூற போலீசார் அலெக்சை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர் சிலையை திருடியதை ஒப்புக் கொண்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நரிக்குறவர் காலனியை சேர்ந்த முத்துபாண்டி, மருதுபாண்டி, ராகவா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்…

What do you think?

நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நெப்போலியன் மகன் தனுஷ்

புதுச்சேரியில் முதல் முறையாக PPL T20 கிரிக்கெட் போட்டி