in

மியான்மர்( பர்மா) நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் பாய்மர படகுடன் கைது

மியான்மர்( பர்மா) நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் பாய்மர படகுடன் கைது

 

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக மியான்மர்( பர்மா) நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் பாய்மர படகுடன் கைது; நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதவி செய்து கடலோர காவல் படை விசாரணை

இந்திய கடல்படை வீரர்கள் நேற்று இரவு கடலில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமாக பாய்மர கப்பல் ஒன்று நின்றுள்ளது. அதனை சுற்றி வளைத்து சோதனை செய்து போது அதில் நான்கு நபர்கள் இருந்துள்ளனர்.

அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும் கைது செய்து அவர்களின் பாய்மர படகினையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று காலை நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மீது ‘இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் (அந்நிய கப்பல்கள் மூலம் மீன்பிடித்தல்)’ சட்டத்தின் (The Maritime Zones of India (Regulation of Fishing by Foreign Vessels Act ) வழக்கு பதியப்பட்டு, சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட உள்ளனர்.

What do you think?

நாகையில் தாளடி நேரடி நெல் விதைப்பு பணி தீவிரம்

உயர்கல்வி மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழில் ஆய்வுகள் நடத்த உரிய நடவடிக்கை