in

ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தில் 4 கருடசேவை

நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தில் 4 கருடசேவை நவதிருப்பதிகளில் நான்கு பெருமாள்களை ஒரே இடத்தில் கருடவாகனத்தில் கண்டு வணங்கி பாக்யம் பெற்ற பக்தகோடிகள்…

108 வைணவதிவ்ய தேசங்களில் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நவதிருப்பதிகள் என்று ஒன்பது திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அதில் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலாகும். நவ திருப்பதிகளில் முதல் தலமாகவும் நவகோள்களில் சூாிய அம்சமாகவும் விளங்குகின்றது..

மூலவா் ஸ்ரீவைகுண்ட நாதன் என்றும் உற்சவா் கள்ளபிரான். இத் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோஸ்த திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த வருடத்திற்கான சித்திரை பிரம்மோற்சவவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் சுவாமி கள்ளா்பிரான் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், ஷேஷ வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
5 ம் திருநாளான இன்று காலையில் ஸ்ரீவைகுண்டம் – கள்ளா்பிரான், ஆழ்வாா்திருநகாி – பொலிந்து நின்ற பெருமாள், திருப்புளியங்குடி – காய்சினி வேந்த பெருமாள், நத்தம் – எம் இடா் கடிவான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வாரால் மங்களாசாசனம் நடைபெற்றது.

பின்னா் மாலையில் அனைத்து பெருமாள்களுக்கும் தாமிரபரணி நதியில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு வைதிக முறைப்படி நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து இரவில் பொிய திருவடியான ஸ்ரீ கருடாழ்வாா் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகள்ளா்பிரான், ஸ்ரீபொலிந்து நின்ற பிரான், ஸ்ரீ காய்சினிவேந்தா், ஸ்ரீ எம் இடா் கடிவான் ஆகியோா் காட்சி அளித்தனா். அம்ச வாகனத்தில் எழுந்தருளியுள்ள சுவாமி நம்மாழ்வாருக்கு குடைவரை பெருவாயிலில் கற்பூர ஆரத்தியுடன் எதிா்சேவை நடைபெற்றது. தொடா்ந்து 4 கருடவாகனத்தில் பெருமாள்கள் மற்றும் அன்ன வாகனத்தில் நம்மாழ்வாா் என திருவீதி புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் நவதிருப்பதி பெருமாளின் 4 கருடசேவையை ஒரே இடத்தில் கண்டு வணங்கி பாக்யம் பெற்றனா்.

What do you think?

தஞ்சை ராமநாதபுரம் ரெட்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மதுரையில் மௌன அஞ்சலி