in ,

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டம் 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டம்
6 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பயநாயக்கன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் (பெசோ) பெற்ற இந்த ஆலையில் உள்ள 35 அறைகளில் 80 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலையில் பட்டாசு உற்பத்திக்கான வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது, காலை உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானது. அந்த அறைகளில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

What do you think?

நடிகர் அல்லு அர்ஜுன் வழக்கில் எதிர்பாராத திடீர் திருப்பம்

நாமக்கல் பரமத்திவேலூர் மாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை