in

40 பவுன் நகையை போலீசார் மீட்பு


Watch – YouTube Click

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் வீட்டில் நகை திருடிய மூவரை போலீசார் கைது செய்து 40 பவுன் நகையை மீட்பு

சிவகாசி லட்சுமி நகரில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் எத்திராஜ் வயசு 62 .கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இவர் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி சென்று விட்டு ஜனவரி 7ஆம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் உள்ள கூட்டை விட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது .

இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .மேலும் இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனர்.

இந்நிலையில் திருப்பூர் முகமது ராபிக் வயது 29 என்பவரை திருப்பூர் போலீசார் ஒரு குற்ற வழக்கில் பிடித்து விசாரணை நடத்திய போது முகமது ராபிக் மற்றும் அவரது கூட்டாளிகளான சத்தியமங்கலம் பரத்குமார் வயது 36, திருவாரூர் நிரூபன், சக்கரவர்த்தி வயசு 34 ஆகிய மூவரும் சேர்ந்து சிவகாசி எத்திராஜ் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திருப்பூர் போலீசார் திருத்தங்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து திருத்தங்கல் போலீசார் மூவரையும் திருத்தங்கல் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது மூவரும் எத்திராஜ் வீட்டில் நகை திருடியது தெரியவந்ததைடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பீதியை ஏற்படுத்திய பாக்கியராஜ் வீடியோ ஆதாரமற்றது

47ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்