in

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ரூபாய் 46.16 கோடி- அமைச்சர் லட்சுமி நாராயணன்

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ரூபாய் 46.16 கோடி- அமைச்சர் லட்சுமி நாராயணன்

 

புதுச்சேரியில் 46 கோடி ரூபாயில் மீன்பிடி துறைமுக விரிவாக்கம் மற்றும் 4-கோடி ரூபாயில் துணைநிலை ஆளுநர் மாளிகை தற்காலிக அலுவலகம் மற்றும் இல்லம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப் பணிகள் குறித்த விவரங்களை பொதுபணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமைப் பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் எடுத்துக் கூறினர்.

அதில் உப்பனாற்றின் மீது கட்டி முடிக்கப்படாமல் இருந்த மேம்பாலத்தின் மீதமுள்ள பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி ரூபாய் 26.40 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்தப் பணியின் மூலம் ஏற்கனவே தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் இருக்கும் பாலத்தின் பகுதிகளையும் காமராஜர் சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநர் தற்காலிக அலுவலகம் மற்றும் இல்லம் கட்டும் பணிக்கான ஒப்பந்தபுள்ளி ரூபாய் 3.69 கோடி மதிப்பீட்டில் கோரப்பட்டுள்ளது. இந்தப்பணி ஏற்கனவே சுற்றுலாத்துறையால் பழைய சாராய ஆலை வளாகத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் துணைநிலை ஆளுநர் தற்காலிக அலுவலகம் மற்றும் இல்லத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது .

இதேபோன்று தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ரூபாய் 46.16 கோடி மதிப்பீட்டில் மேற்க்கொள்ளப்படவுள்ள பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கப்பட உள்ள இந்த பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் லஷ்மி நாராயணன் தெரிவித்தார்.

What do you think?

8.5 லட்சம் செலவில் மூன்று சக்கர வாகனத்தை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார் 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுச்சேரி மார்க்கெட் வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்