in

திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கணக்கில் வராத 68,000 பணம் பறிமுதல்

திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத 68,000 பணம் பறிமுதல்- தொடர்ந்து அதிகாரியிடம் விசாரணை

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தீபாவளி பண்டிகையை யொட்டி அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் மற்றும் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்க வருடந்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் பத்திர பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ஈடுபட்டனர்.

கணக்கில் வராத பணம் பறிமுதல்: அதிகாரிகளிடம் விசாரணை

திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் மூன்று இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 68,900 ரூபாய் பறிமுதல்:

ஸ்ரீரங்கம் ஆர்டிஓ (பொறுப்பு) பவுலின் தெரசா, கண்காணிப்பாளர் சோமசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

What do you think?

தருமபுரம் ஆதீன மடாதிபதியின் 60 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் 1500 பேருக்கு விலையில்லா புத்தாடை மடாதிபதி வழங்கினார்

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு பகுதியில் கழிவு நீர் வடிகால் வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை