நாமக்கல் அருகே ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு தங்க கவச அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் பெரமாண்டபாளையம் கிராமம் நொச்சிப்பட்டியில் எழுந்தருளியுள்ள பழைமையான ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீதேவி பூமி தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் மண்டப பூஜையின் 48.ம் நாள் பெருவிழா மற்றும் ஆடி 18 தினத்தை ஒட்டி மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு யாக வேள்விகள் அமைத்து பின்னர் பூர்ணாகதி நிறைவுற்றவுடன்மூலவர் வரதராஜ பெருமாளுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் திருமந்திரம் பச்சரிசி மாவு கரைசல் மஞ்சள் சந்தனம் சொர்ணம் மற்றும் கலசதீர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்கக் கவசம் சாற்றப்பட்டு துளசி மற்றும் வண்ண நறுமலர்கள் கொண்டு அர்ச்சனை செய்த பின்மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர். அப்போது வாணவேடிக்கை நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது.