கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் சொர்ணாகர்ஷண பைரவர், திருக்கோவில் கார்த்திகை மாதம் காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் யாகத்தில் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் அடுத்த நீலகண்ட பைரவர், விசாலாட்சி பைரவர், கேர பைரவர், காலபைரவர், இந்த சொர்ணபைரவர், சொர்ணகாலபைரவர், விஸ்வரூப பைரவர், நிர்பய பைரவர், ருண்டமாலா பைரவர், கோரநாத பைரவர் என்று பலப்பல விதமான 64 ரூபங்கள், பைரவருக்கு உள்ளது. ஆனால், இந்த 64 பைரவர் ரூபங்களில், சொர்ணாகர்ஷண பைரவ ரூபம் கிடையாது. காரணம், இந்த சொர்ணாகர்ஷண பைரவர், சிவனின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த சொர்ணாகர்ஷண பைரவர், திருத்தலத்தில் சுற்றுப்புற எட்டு திசைகளிலும், அஷ்ட பைரவர்கள் அதாவது எட்டு பைரவர்கள் தனித் தனி சந்நதிகளைக் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். ஒவ்வொரு பைரவரும், ஒவ்வொரு வேண்டுதலுக்கு அதிபதி. பைரவர், இந்த திருத்தலத்தில் கல்யாண திருக்கோலத்திலும், பைரவரின் இடது தொடைப் பகுதியில் அம்பாள் அமர்ந்தும், அம்பாளின் வலது கையானது, பைரவரின் வலது தோள்பட்டையின் மீது வைத்தும், பைரவரை ஆலிங்கனம் செய்வது இத்திருத்தலத்தின் சிறப்பு. சொர்ணாகர்ஷண பைரவர், சுயம்புவாக தோன்றியவர். சுமார் 100 வருட பழமைவாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. ஆகையால், பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அஷ்டமி அன்று செய்யப்படும் யாகமே சிறப்பானதாக பார்க்கப்படுகிறது..
பைரவருக்கு அஷ்டமி நாட்களில் செய்யப்படும் யாகத்தின் பெயர், “தன ஆகர்ஷண யாகம்’’ இந்த யாகம், மிக சிறப்பானது இந்த யாகத்தில் முதலாவதாக, கருப்பு மிளகு அதனை தொடர்ந்து, நாட்டுச் சர்க்கரை, முந்திரி ஆகியவை யாகத்தில் சேர்த்து பூஜிக்கப்படுகிறது. இந்த பொருட்களை, பக்தர்கள் வாங்கிக் கொடுத்து, வேண்டியதை வேண்டிக் கொண்டால், நினைத்தது நடக்கும். அதுவும், மிளகினைக் கொடுத்து வேண்டிக் கொள்ளும்போது, யாகத்தில் மிளகானது வெடித்தால், நாம் மனதில் நினைத்த காரியம் வெற்றியடையும் என்றொரு ஐதீகமும் உள்ளது. பூஜைகள் முடிந்த பின்னர், இந்த புனுகு என்று சொல்லக் கூடிய மையினை பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். தினமும் இதனைட நெற்றியில் சிறிதளவு வைத்துக் கொண்டாலும் அல்லது நம் வீட்டின் பீராவில் வைத்தாலும், நம்மை அறியாது நமக்குள் ஒரு வசீகரத்தன்மைகிட்டும்
இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலத்தில் காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு தன ஆகர்ஷண சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திருவாரூர் நாராயண பீடம் ஸ்ரீலஸ்ரீ குரு சிவாஜி சந்தோஷ சுவாமிகள் சன்னிதானம் இசையமைப்பாளர் கங்கை அமரன், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது குடும்பத்துடன் யாகத்தில் கலந்து கொண்டனர்..