in ,

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா ஊஞ்சல் உற்சவம்

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இலுப்ப தோப்பு அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் என்கின்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா என்னும் வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் இலுப்பத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் என்கின்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மனாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து வண்ண மலர்களால் உற்சவர் அம்மன் ஸ்ரீ காமாட்சி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை, சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம், பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

திண்டிவனம் ஜெயபுரம் அருள்மிகு ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா மஞ்சள் நீராட்டு விழா

பெரமண்டூர் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்