in

காசி விசுவநாதர் கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை


Watch – YouTube Click

 

காசி விசுவநாதர் கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை

செஞ்சி மாநகரின் ஈசான மூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயிலில் உற்சவர் பார்வதி சிவன் ஐம்பொன் சுவாமிக்கு 48 -வது நாள் மண்டல பூஜை…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட சிறுகடம்பூர் பகுதியில் அமைந்துள்ள சித்தர்கள் வழிபாடுகள் செய்த 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருத்தலம் என கூறப்படும் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட உற்சவங்களான சிவன் பார்வதி ஐம்பொன் சிலை சுவாமிக்கு 48 -வது மண்டல நிறைவு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

சித்திரை மாதம் 08 -ஆம் தேதி (21-04-2024). ஞாயிற்றுக்கிழமை அன்று புதியதாக வடிவமைக்கப்பட்ட சிவன் பார்வதி, உற்சவர் ஐம்பொன் திருமேனிக்கு சிறப்பு வேள்வி, கோ, பூஜைகளுடன், கலசாபிஷேக வழிபாடு பூஜை தொடங்கப்பட்டு அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் உற்சவர் சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று மாலை 48 -வது மண்டல நிறைவு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் கலசங்கள் வைத்து யாக சாலை அமைத்து108 திரவிய பொருட்கள் கொண்டு யாக பூஜையில் பூர்ணாகதி சமர்ப்பிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் பூஜை செய்யப்பட்ட கலசங்களை சிவவாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து சாமிக்கு கலச புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு பூக்களால் தங்க ஆபர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை கட்டப்பட்டது.

அபிஷேகம் செய்யப்பட்ட கலச புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

பக்தர்கள் தங்கள் மனமுருக வேண்டுதலோடு அபிஷேகம் செய்யப்பட்ட பூக்களை கொண்டு சாமிக்கு சமர்ப்பித்து வணங்கினர்.

காலையில் மூலவர் காசி விஸ்வநாதர் நந்தியன் பெருமானுக்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் விபூதி பேரிச்சம்பழம், போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் காசி விஸ்வநாதருக்கு தீபா ஆராதனை காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள், சிவ தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

நெல்லையப்பர் திருக்கோவில் தேர்களை தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்தனர்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆட்சித் தலைவர் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதர் ஆய்வு