செஞ்சி சந்தமேடு குட்டக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் 48-வது நாள் மண்டல பூஜை… சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட சந்தை மேடு குட்டைகரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்று தினந்தோறும் மண்டல அபிஷேகம் பூஜை நடைபெற்று வந்த நிலையில் இன்று 48-வது மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடை பெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு ரக்ஷா பந்தனம், கும்ப கலச அலங்காரம், செய்து யாகசாலை குண்டம் அமைக்கப்பட்டு,புரோகிதர்கள் யாக மந்திரங்கள் முழங்க புர்ணாகதி குண்டத்தில் சாத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
முன்னதாக மூலவர் ஸ்ரீ செல்வவிநாயகர் சாமிக்கும்,ஸ்ரீ மாரியம்ம னுகும், பால், தயிர்,சந்தனம்,விபூதி, பன்னீர்,பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கலசங்கள் மேல தாளங்கள் முழங்க திருக்கோவிலில் வலம் வந்து கலசங்களின் புனித நீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பலவகை வண்ணமயமான பூக்களால் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
48 -வது மண்டல பூஜை நிறைவு விழாவில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான்,கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் அஞ்சலை நெடுஞ்செழியன்,மேலச்சேரி கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன்,பொற்கொடி மற்றும் செஞ்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அப்பகுதி இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், செய்திருந்தனர்.
மண்டல அபிஷேக நிறைவு விழா பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.