வழக்கறிஞர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும் என்று மதுரையில் வழக்கறிஞர்கள் கோரிக்கை
மதுரையில் ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சிலிங் நடத்திய சட்ட நிபுணர்களுககாண கருத்தரங்கம் நடைபெற்றது இதில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு மார்க்கண்டேய கட்ஜு மற்றும் இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளரை சந்தித்த வழக்கறிஞர் கூறியதாவது
இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கான உரிமைகளை மற்றும் நலன்களை பாதுகாப்பதற்காக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை ஆல் இந்தியா லாயர் கவுன்சிலிங் வலியுறுத்துகிறது
அரசியலமைப்பு உரிமைகள் மனித உரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த வழக்கறிஞர் தொழிலுக்கு ஆழமான அச்சுறுத்தலை புதிய குற்றவியல் சட்டங்கள் ஏற்படுத்துகின்றன இந்தச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கு தேவையற்ற தடைகளையும் சிக்கல்களையும் உருவாக்கி பயனுள்ள சட்ட பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான அவர்களின் திறனை தடுக்கிறது
ஜார்கான் அரசின் முன்மாதிரியான முன்முயற்சி பின்பற்றி மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் வழக்கறிஞர்களுக்கான விரிவான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென ஆல் இந்திய லாயர் கவுன்சிலிங் கேட்டுக்கொள்கிறது வழக்கறிஞர்களுக்கு ஐந்து லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வக்கீல்களுக்கு 14,000 ரூபாய் மாதேந்திர ஓய்வூதியம் மற்றும் புதிதாக பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு அவர்களின் பயிற்சியின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
பொது ஒதுக்கீட்டின் கீழ் இளம் வழக்கறிஞர்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்க பார் கவுன்சிலனுடன் கலந்தாலோசித்து தமிழக அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
சமீபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சட்டப்பிரிவு ஏற்பாடு செய்த கூட்டத்தில் வாரணாசி மற்றும் மதுரா கோவில் வழக்குகள் ஒர்க் சட்டத்தின் திருத்த மசோதா போன்ற முக்கியமான விவாதங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றத்துக்கு ஆல் இந்தியா லாயஸ் கவுன்சிலிங் கண்டனத்தை பதிவு செய்கிறது என பல கோரிக்கைகள் வழக்கறிஞர் வைத்தனர்