பெரியகுளத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ.கௌமாரியம்மன் கோவில் திருவிழா கம்பத்திற்கு மஞ்சள்நீர் ஊற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு….
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கௌமாரியம்மன் கோவிலின் கடந்த 2-ம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழாவுடன் ஆனிபெருந்திருவிழா துவங்கியது.
அதனைத் தொடர்ந்து இக்கோவில் திருவிழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன
இந்நிலையில் இன்று திருவிழாவான கௌமாரிஅம்மனுக்கு கோவில் முன்பு உள்ள கம்பத்திற்கு மஞ்சள்நீர் ஊற்றும் நிகழ்ச்சியில் அதிகாலை 3 மணி முதல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரும் அம்மனுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றியும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக அங்க பிரதசனம் செய்தும் வழிபட்டனர்.
மேலும் பெரியகுளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதியில் இருந்து அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீர் எடுத்து ஊத்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நாளை 17ம் தேதி அருள்மிகு கௌமாரியம்மன் ஆனிபெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் ஆன அக்னிசட்டி ஆயிரம் கண் பானை உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்