in ,

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 1008 சங்காபிஷேகம்

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 1008 சங்காபிஷேகம்

 

சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் சோமாவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இந்த சங்காபிஷேகத்தை முன்னிட்டு காலை முதல் மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

மேலும் 1008 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகளும் நடைபெறுகின்றன. கோவில் செயல் அலுவலர் இளங்கோவன்,பரம்பரை அறங்காவலர்கள் குழுத்தலைவர் இராமமூர்த்தி பூசாரி உள்ளிட்ட சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

இரண்டாவது படத்தின் புகைப்படங்களைப் வெளியிட்ட லெஜண்ட் சரவணன்

உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜை- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்