in ,

நாமக்கல் அருகே ஸ்ரீ நிதி தீர்ததர் 544 -ம் ஆண்டு குரு பூஜை

நாமக்கல் அருகே ஸ்ரீ நிதி தீர்ததர் 544 -ம் ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு அபிஷேக ஆராதனை வெள்ளிக் கவச அலங்காரத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த அனிச்சம்பாளையத்தில் அமைந்திருக்கும் பழமையான ஸ்ரீ ஸ்ரீ நிதி தீர்த்த மகா சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிதி தீர்ததரின் 544 வது குரு பூஜை விழாவை முன்னிட்டு இன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நிதி தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு துளசி, வண்ணநறுமலர்கள் , கஸ்துாரி மஞ்சளில் அர்ச்சனை செய்த பின் பல்வேறு தீப தூப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஶ்ரீநிதி தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், ஸ்ரீ ஆஞ்சியர் தரிசனம் செய்து செய்தனர். அப்போது சிறிய தேரில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நிதிதீர்த்தர் சிறிய தேரில் எழுந்தளி கோவில் உள்புறப்பாடு உலா நடைபெற்றது . இதில் கர்நாடக மாநிலம் ,சிமோகா மாவட்டம், பாளேகார் மட ஆலய இளையபீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ 1008 ராமபிரிய தீர்த்தர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் இங்குள்ள பிரசன்ன வெங்கட்ரமன பெருமாள் ஆலயம் சென்று சுவாமி தரிசனம் செய்தார். வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வு நடைபெற்றது

What do you think?

நாமக்கல் மணப்பள்ளி ஸ்ரீ தங்கமுனியப்பசுவாமி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா

ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்