in ,

திண்டிவனம் ஜெயபுரம் அருள்மிகு ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா மஞ்சள் நீராட்டு விழா

திண்டிவனம் ஜெயபுரம் அருள்மிகு ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா மஞ்சள் நீராட்டு விழா

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜெயபுரம் அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா என்னும் வசந்த உற்சவ திருவிழாவில் இறுதி நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் நின்றபடியே கையில் குடத்துடன் வீதி உலா வந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜெயபுரம் அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா என்னும் வசந்த உற்சவ இறுதி நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு மூலவர் தங்க கவசத்தில் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து வண்ண மலர்களால் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை,சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரங்கள், கும்ப தீபம், பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி ஆகியவை காட்டப்பட்டன.

தொடர்ந்து அம்மன் கையில் வேப்பிலையுடன் நின்றபடி மாட வீதி வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தன.

What do you think?

1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் ஆலயத்தில் மழைநீர் தேங்கி பக்தர்கள் கடும் அவதி

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு 48 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா ஊஞ்சல் உற்சவம்