ஜெயபுரம் அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா வசந்த உற்சவ திருவிழா
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜெயபுரம் அருள்மிகு ஜெய முத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா என்னும் வசந்த உற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் ஜெய முத்து மாரியம்மன் ஆடி பெருவிழாவை முன்னிட்டு உற்சவர்கள் ஸ்ரீ ஜெயலிங்கேஸ்வரர் வண்ண மலர்கள் கொண்டு திருநெல்வேலி நகரில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ காந்திமதி அம்மாள் உடனுறை ஸ்ரீ நெல்லையப்பர் சுவாமிகளாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து மங்கள தாம்புல சீர்வரிசை பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன. தொடர்ந்து முகூர்த்த கால் வைபவமும், தொடர்ந்து கடைசி பூஜையும் காப்பு கட்டு நிகழ்வும், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியும் மங்கள நான் அனுபவிக்கும் வைபவமும் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
தொடர்ந்து மகா தீபாரதனை பஞ்சமுகத்திபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
மேலும் திருக்கல்யாண வைபவத்திற்கு வந்திருந்த பெண் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.