புதுச்சேரி தவளைகுப்பம் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த பள்ளி ஆசிரியரை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.
போலீசார் ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில் பள்ளியை மூட வேண்டும் எனக் கூறியும், ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி சிறுமியின் உறவினார்கள் மற்றும் மீனவ மக்கள் புதுச்சேரி கடலூர் சாலையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டு வருவதால் புதுச்சேரி கடலூர் சாலையில் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து பாதிப்பு.
புதுச்சேரி தவளக்குப்பம் நல்லவாடு சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவிக்கு பள்ளியில் பணி புரியும் வேதியல் ஆசிரியர் மணிகண்டன் பாலியல் சீண்டல் கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் தனியார் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையடினர். தொடர்ந்து தவறு இழைத்த ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் சாலை தவளக்குப்பம் சந்திப்பில் மறியல் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மறியல் போராட்டத்தால் கடலூர் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் மறியல் போராட்ட பகுதிக்கு சபாநாயகர் செல்வம், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், டி.ஐ.ஜி சத்ய சுந்தரம் மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரச்சனைக்கு காரணமான தனியார் பள்ளியை மூடப்படும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
மாலை 5 மணி முதல் தற்போது வரை நடைபெற்று வரும் மறியலால் சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு இரு புறமும் கடலூர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருப்பு புதுச்சேரி தவளக்குப்பம் பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.