விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 3வது நாள், 5வது நாள் நீர்நிலைகளில் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது .
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக, இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 412 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில், தஞ்சாவூர் நகர் பகுதியில் மட்டும் 60 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், 110 சிலைகள் மட்டுமே ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க போலீசார் தரப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் நகர் பகுதியில், நேற்று பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ரயில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில், மேளம் மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சிகள் விமர்சையாக நடந்தது. இதனையடுத்து காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, கரந்தை வழியாகச் சென்று வடவாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து தஞ்சாவூர் நகர் பகுதியில் மட்டும் 300 போலீசார் என மாவட்டம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் தொடர்பாக 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.