in

திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த UL 131 விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தான் எடுத்து வந்த 3 லக்கேஜ் டிராலி பையின் உட்பகுதியில் தங்கத்தை ஒயர் வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பைகளில் இருந்து ரூ.43 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

சைபர் கிரைம் போலீசார் பதிவு வழக்கிற்கு சொந்த ஜாமினில் விடுவிப்பு

சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறிய தனியார் சொகுசு பேருந்து