சாலை மறியலில் ஈடுபட்ட 65 துணை பஞ்சாயத்து தலைவர்கள்
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வானூர் ஒன்றிய 65 துணை பஞ்சாயத்து தலைவர்கள்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சேமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தசரதன்.
சேமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் சேதனப்பட்டு விநாயகபுரம் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளடக்கிய சேமங்கலம் ஊராட்சியில் சுமார் 3,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த மூன்றுஆண்டுகளா க சேமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசிய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சாலை, சாலையோர மின்விளக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சேமங்கலம் பஞ்சாயத்து தலைவர் தசரதன் பஞ்சாயத்தில் அரசு சார்பில் செய்யப்பட்ட பணிகளுக்கு காசோலை பெறுவதற்கு துணைத் தலைவர் ரம்யா விஜயமூர்த்தி ஒப்புதல் தர மறுப்பதாகவும் பணிகளைத் தொடர இடையூறாக இருப்பதாகவும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் அடிப்படையில் துணைத்தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வானூர் ஒன்றிய துணை தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் 65 பஞ்சாயத்தை சேர்ந்த துணை பஞ்சாயத்து தலைவர்கள் இன்று வானூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு புதுச்சேரி திண்டிவனம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் திடீர் சாலை மறியலால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்திய திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவியது.