in

விநாயகர் சிலைகள் தாரை தம்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காவிரியில் விசர்ஜனம்

 விநாயகர் சிலைகள் தாரை தம்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காவிரியில் விசர்ஜனம்

 

குத்தாலத்தில் பிரதிஷ்டை செயயப்பட்ட 7விநாயகர் சிலைகள் தாரை தம்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காவிரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 395 விநாயகர் சிலைகள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. ஆங்காங்கே கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கோயில்களில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 27 விநாயகர் சிலைகள் நேற்று இரவு மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து வரப்பட்டது.

ஏழு சிலைகள் குத்தாலம் கடைவீதிக்கு எடுத்துவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக காவிரி தீர்த்த படித்துறைக்கு கொண்டுவரப்பட்டு சிலைகள் பக்தர்களின் பக்தி முழங்கங்களோடு விசர்ஜனம் (கரைப்பு) செய்யப்பட்டது.

விநாயகர் சிலை ஏற்பாட்டாளர்களுக்கு இந்து முன்னணி சார்பில் காவி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், காவிரியில் தண்ணீர் இருப்பதால் ஏராளமான விநாயகர் சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர்நிலைப் பகுதிகளில் கரைக்கப்பட்டன.

What do you think?

நத்தம் அருகே இளைஞரின் முயற்சியால் ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புதிய வீடு கட்டி திறக்கப்பட்டது

திமிதி திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்த திரௌபதி அம்மன்