in

டி.குரும்பப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் 70 அடி உயரம் உள்ள வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

டி.குரும்பப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் 70 அடி உயரம் உள்ள வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

 

திண்டுக்கல் அருகே டி.குரும்பப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 70 அடி உயரம் உள்ள வழுக்கு மரத்தில் ஏறி பரிசை வென்ற இளைஞர்.

திண்டுக்கல் அருகே உள்ள டி.குரும்பப்பட்டியில் முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

இந்த கோவிலானது கூவனூத்து புதூர் , நொச்சி ஓடைப்பட்டி, கொலைகாரன்பட்டி , குரும்பபட்டி, சட்டக்காரன் பட்டி கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலாகும்.

இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் 27, 28, 29 ஆகிய தேதிகளில் திருவிழா நடத்தப்படும். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த கிராம மக்களால் நடத்தப்படும்.

இத்திருவிழாவில் 5 ஆண்டுக்கு ஒரு முறை வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்தும் வருகை தந்தனர்.

முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்பு 70 அடி உயரமுள்ள வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியானது துவங்கியது. இந்த வழுக்கு மரத்தில் ஏற இளைஞர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு மரத்தில் ஏறத் துவங்கினர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வழுக்கு மரத்தில் ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பரிசு முடிப்பை கூவனூத்து புதூர் முத்தாண்டி கொட்டத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் பரிசினை வென்றார்.

What do you think?

குருவித்துறை குரு ஸ்தலம் சித்திர ரத வல்லவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவ வைபோகம்

மலையாள நடிகர் சங்கம் கலைக்கபட்டது