in

முத்துப்பேட்டை உலக பிரசித்தி பெற்ற தர்காவில் 723 ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா

முத்துப்பேட்டை உலக பிரசித்தி பெற்ற தர்காவில் 723 ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா

 

முத்துப்பேட்டை உலக பிரசித்தி பெற்ற தர்காவில் 723 ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது ஜாதி மதம் இன்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை ஜாம்புவானோடை உலக  பிரசித்தி பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவுது காமில் ஒலியுல்லா  தர்காவில் 723வது ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

முன்னதாக வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  புனித கொடி பல்லக்கு ஊர்வலம் தர்ஹாவிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை ஆசாத் நகர்,புதிய மற்றும் பழைய பேருந்து, நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்த பின்னர் மீண்டும் தர்ஹாவை அடைந்தது.

தொடர்ந்து இரவு புனித கொடி ஏற்றப்பட்டது இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜாதி மதமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.
இந்த கொடியேற்ற விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

14 நாட்கள் திருவிழாவை தொடர்ந்து வரும்  12 ம் தேதி தேதி நள்ளிரவில் சந்தனக்கூடு விழா  நடைபெறுகின்றது.

இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நவம்பர் 13ம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

ஓடும் பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் இருவர் கைது

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்