கின்னஸ் சாதனை முயற்சியாக 76 மாணவ மாணவிகள் – 76 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டம்
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில்வே காலநிலையில் தோன்றிய மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் – கின்னஸ் சாதனை முயற்சியாக பங்குபெற்ற 76 மாணவ மாணவிகள் – 76 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நூதன கொண்டாட்டம்.
இந்திய திருநாட்டில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது,76 வது குடியரசு தினத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வண்ணம்
மதுரை ரயில்வே காலனி பகுதியில் உள்ள மைதானத்தில் ரயில்வே குடியிருப்பவர்கள் ஒன்றிணைந்து நடத்திய குடியரசு தின விழாவில்
இந்தியா வரைபடம் போன்று வரையப்பட்டு 76 பள்ளி மாணவ மாணவிகள்,மறைந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுபடுத்தும் வண்ணம் அவர்களைப் போன்று உடை அணிந்து 76 நபர்கள் பங்கு பெற்றனர்
ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் தல ஒரு நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்த வேளையில் 76 நிமிடங்கள் மாணவ மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த உடை ஏற்றிருந்த வேடத்திற்கு ஏற்றார் போல் அவர்களுடைய பெயர் விபரங்கள் உள்ளிட்டவைகளை பேசியது குறிப்பாக மழலை மொழியில் பேசியது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது
தேசத்தந்தை என்று அழைக்கப்படக்கூடிய மகாத்மா காந்தி, வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீரமங்கை வேலுநாச்சியார், பகத்சிங், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ….ஜான்சி ராணி, மீராபாய், முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தற்கொலை படை பெண்ணாக மாறிய குயிலி… போன்ற மறைந்த தேசிய தலைவர்கள் உள்ளிட்டவர்களின் உருவத்தோடு தங்களுக்கே உரித்ததான மலரே மொழியில் குழந்தைகள் மெல்ல மைக்கை பிடித்தவர் பேசினார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோர்களோடு வந்திருந்தாலும் பெற்றோர்கள் தயார்படுத்த விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று தங்களது வீட்டு பகுதியில் இருக்கக்கூடிய ரயில்வே காலனி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்ற கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கு பெற்றனர்.
இந்திய வரைபடம் போன்று வரையப்பட்டு 76 மாணவ மாணவிகள் மறைந்த சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று உடைய அணிந்து அணிவகுத்து நிற்க வரைபடத்தின் நடுவே இந்திய திருநாட்டின் மூவர்ண கொடிய ஏந்தியவாறு பட்டொளி வீசி பறக்கச் செய்தார் பாரதமாதா போன்று வேடமடைந்த மாணவி தங்களுக்கே உரித்ததான மழலை மொழியில் ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் ஏற்றிருக்கக் கூடிய வேடங்களை பற்றியும் அந்த கேரக்டருக்குரிய விபரங்கள் குறித்தும் பேசினார்கள்.
சுவாமி விவேகானந்தர் முதல் நேதாஜி வரை உருவம் தரித்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றது அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றது
இறுதியாக தனியார் அமைப்பைச் சேர்ந்த உலக சாதனை நிறுவனம் 76 குழந்தைகள் 76 தேசிய தலைவர்களுடைய உருவம் குறித்து 76 நிமிடம் அவற்றை குறித்து பேசியதை உலக சாதனையாக அங்கீகரித்து.
அவர்களுக்கு உலக சாதனை அங்கீகாரத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.
குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில்வே காலனி பகுதியில் நடைபெற்ற கின்னஸ் சாதனை முயற்சி தற்போது பேசு பொருளாகி வருகிறது.