76ஆவது குடியரசு தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்பு – 3கோடியே 43 லட்சத்தி 82ஆயிரத்தி 929 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாட்டின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசியகொடியேற்றினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த்சின்ஹா மாநகரகாவல் ஆணையர் ,லோகநாதன், மாவட்ட எஸ்பி அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம் அலுவலகம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 43நபர்களுக்கு – 3கோடியே 43 லட்சத்தி 82ஆயிரத்தி 929மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் பாதுகாப்பு பணியின்போது சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழக அரசின் பதக்கங்களையும், 50க்கும் மேற்பட்டோருக்கு சிறந்த பணிகளுக்கான விருதுகளையும், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றி அரசு மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது