திருவாரூரில் நகர கழகம் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழா
திருவாரூரில் நகர கழகம் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நகரக் கழகம் சார்பாக நகர கழக அலுவலகம் முன் அமைக்கப்பட்டுள்ள திருஉருவ பலத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அதிமுக நகர கழக செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் அதிமுகவினர் திருவாரூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து புதுத்தேருவில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ன. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.