நாகையில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழா
நாகையில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றிவைத்து, 59லட்சத்து 75ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஸ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் சமாதான புறா பறக்க விட்டனர்.
தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 40 பயனாளிகளுக்கு 59லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.