in

புவனகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த பங்களாதேஷை சேர்ந்த 8 பேர் கைது

புவனகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த பங்களாதேஷை சேர்ந்த 8 பேர் கைது

 

புவனகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த பங்களாதேஷை சேர்ந்த 8 பேர் கைது. கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தது அம்பலம். 8 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது வண்டுராயன்பட்டு கிராமம் இங்குள்ள அரசு விதைப்பண்ணை உள்ளே புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 8 பேர் மீது சந்தேகம் இருப்பதாக சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் புவனகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து புவனகிரி போலீசார் வண்டுராயன்பட்டு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்த 8 பேரை புவனகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர்.

பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், மேற்கு வங்க மாநிலத்தில் போலியாக ஆதார் கார்டை பெற்று தங்கி இருந்து கட்டிட வேலை செய்ததும், அவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது.

விசாரணையில், அவர்கள் முகமதுமிராட்அலி(32), முகமது அப்துல்லா(28), முகமதுஆரிப்கோசன் (29), முகமதுமினருல்ஹக்(18), முகமதுஷகில்அலி(20), முகமது ரோம்சன்அலி (20), முகமதுமிராசுல் இஸ்லாம்(26) மற்றும் அவல்ஷேக்(22) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் புவனகிரி காவல் நிலையத்திற்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை கைது செய்தது குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். பின்னர் டிஎஸ்பி லாமேக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு அரசு விதைப்பண்ணையில் கட்டுமான பணிகள் நடந்து வரும் இடத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு வட இந்தியர்கள் 8 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறினர்.

பேட்டி சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு லாமேக்

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து சிறப்பு புலனாய்வு துறை போலீசார் நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் அனைவரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிய வந்தது. அனைவரும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. பிழைப்பு மற்றும் வாழ்வாதாரம் தேடி இந்தியாவுக்குள் எந்தவித ஆவணங்களும் இன்றி அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இந்த மாநிலத்திற்குள் நுழைந்து ஒரு குழுவாக சேர்ந்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதித்ததில் இவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. அதன் பேரில் 8 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் குறைந்த சம்பளத்திற்கு யாரேனும் வேலைக்கு வந்தால் அவர்களிடம் பொதுமக்கள் விசாரணை நடத்த வேண்டும். இது ஆபத்தாக முடிவதற்கு. வாய்ப்பு இருக்கிறது எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.

What do you think?

தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

ஜனநாயகன் படத்திற்காக….சன் தரப்பிடம் சரண்டர் ஆன விஜய்… அவசரபட்டு திட்டி…டோமோ