திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது…
12 கிலோ கஞ்சா பறிமுதல்….
திருவண்ணாமலை நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் போலீசார் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திருவண்ணாமலை சமுத்திரம் காலனி மற்றும் கல் நகர் பகுதியை சேர்ந்த சகுந்தலா, சுகன்யா, சுபாஷினி, ஜெயப்பிரதா, மதன், சக்திவேல், தனுஷ் சூர்யா ஆகிய 8 பேரும் நகரில் பல்வேறு இடங்களில் மறைமுகமாக கஞ்சாவை மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து காவல்துறையினர் கடந்த இரண்டு தினங்களாக நடத்திய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 8 பேரையும் பல்வேறு இடங்களில் மடக்கி பிடித்து கைது செய்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்
மேலும் அவர்களிடமிருந்து 11 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்ததுடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.