அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு 8 மாணவர்கள் சஸ்பெண்ட்
புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு 8 மாணவர்கள் சஸ்பெண்ட். பள்ளி வகுப்பறைக்குள் குடிபோதையில் வந்ததால் தலைமை ஆசிரியர் நடவடிக்கை..
புதுச்சேரி லாஸ்பேட்டையில் நாவலர் நெடுஞ்செழியன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை புதுச்சேரி முழுவதும் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் கடந்த சில நாட்களாகவே மாணவர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வதும், தகராறில் ஈடுபடுவதும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பள்ளி வகுப்பறைக்கு மாணவர்கள் குடிபோதையில் வருவதும், வகுப்பறையில் அமர்ந்து வாட்டர் பாட்டிலில் மதுவை கலந்து குடித்து வந்துள்ளனர், மேலும் கஞ்சை போன்ற போதை வஸ்துகளும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது..
இதனை அறிந்த ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர் ஆனாலும் தொடர்ந்து இந்த செயல் ஈடுபட்டதால் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்கப்பட்டு பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு 8 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்…
புதுச்சேரி அரசு பள்ளியில் வகுப்பறைக்கு குடித்துவிட்டு, வகுப்பறையில் அமர்ந்து குடித்துவிட்டு, சண்டை போடுவதும் இருந்த நிலையில் 8 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…