in

காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 810 லிட்டர் சாராயம் மற்றும் காரை பறிமுதல்

காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 810 லிட்டர் சாராயம் மற்றும் காரை பறிமுதல்

 

மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் அருகே மூட்டை மூட்டையாக சாராயம் பறிமுதல், காவல்துறை வாகனம் துரத்திய நிலையில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் காரை விட்டு விட்டு தப்பி ஓடிய கடத்தல்காரர்கள், காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 810 லிட்டர் சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் பகுதியில் பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவல்லி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு கார் சென்றது அதனை நிறுத்திய போது நிற்காமல் வேகமாக சென்றது காரை காவல்துறையினர் விரட்டிச் சென்றபோது வழுவூர் ரயில்வே கேட் அருகே ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்டதால் காரை அப்படியே விட்டுவிட்டு காரில் இருந்தவர்கள் தப்பிச்சென்றனர் காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் மூட்டை மூட்டையாக காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயம் இருப்பது கண்டறியப்பட்டது மொத்தம் 810 லிட்டர் சாராயத்தையும் காரை கடத்துவதற்கு உபயோகப்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பெரம்பூர் காவல் துறையினர் கைப்பற்றி கடத்திய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் கைப்பற்றப்பட்ட சாராயத்தின் மொத்த மதிப்பு நான்கு லட்சமாகும்.

What do you think?

செல்லுலாய்டு காலத்தைத் தாண்டி பிரபலமடைந்து வரும் நாடகங்கள்

திருச்சியில் ஒரு மணி நேரமாக கனமழை காவல் நிலையத்தில் புகுந்த மழை நீர்