தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 8 வது பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 8-வது பட்டமளிப்பு விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 854 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் எட்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பல்வேறு மாநிலங்களை சார்ந்த 467 மாணவிகளும்,387 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரான பத்மபூஷன் ஜி பத்மநாபன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்பொழுது பல்கலைக்கழக வேந்தர் ஜி. பத்மநாபன் பேசும்போது…ஜனாதிபதி திரௌபதி மும்மு போன்றவர்களின் வாழ்க்கைகளை வழிகாட்டியாக வைத்து தங்களின் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் திருமுருகன், நிதி அலுவலர் கிரிதரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், நூலகர் பேராசிரியர் பரமேஸ்வரன் மற்றும் புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.