in

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் புதிய கட்டிடம் 9.5 கோடி ரூபாய்


Watch – YouTube Click

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் புதிய கட்டிடம் 9.5 கோடி ரூபாய்

 

ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை எனறு தெரிவித்த அண்ணாமலையின் கருத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்ளவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் புதிய கட்டிடம் 9.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக
திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது நேரலை துண்டிக்க நீங்கள் உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது அது உண்மையா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நீங்களே சமூக வலைதளங்களில் போட்டுக்கொண்டு நீங்களே கேள்வி கேட்கிறீர்கள் என்று பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு?ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை என்ற அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் அண்ணாமலையின் கருத்திற்கு நன்றி என பதில் அளித்தவாறு சிரித்துகொண்டே சென்றார்.


Watch – YouTube Click

What do you think?

சத்யஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாமக தயாராக உள்ளது மழுப்பல் பதில்