in

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி


Watch – YouTube Click

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் சிறு படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணத்திலிருந்து மீன்பிடி படகு ஒன்று சுமார் 130 பேரை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஒரு தீவை அடைய முயன்றபோது கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. கடலில் படகு மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம், விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் பலரைத் தேடி வரும் நிலையில், கடல் சீற்றம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய படகில் அதிகமானோர் பயணித்ததும், அது பயணிகளுக்கான படகு அல்ல என்பதும் இந்த விபத்துக்கான காரணம் என்கின்றனர்.

பெரும்பாலானோர் காலரா நோய் பீதியின் காரணமாக பயந்து இந்த படகு மூலம் தப்பிக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்க நாடு, அக்டோபரில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இதில் குறிப்பாக மொசாம்பிக்கின் நம்புலா மாகாணம் காலரா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கு நம்புலா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், காலரா பீதியின் காரணமாக படகு மூலம் தப்பிக்க முயன்றவர்கள் விபத்தில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

மீனவர்கள் கரை திரும்ப ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு

லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்டார்