குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஆதாரமாக திமுகவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்
புதுச்சேரியில் 25 ஆண்டு காலம் தனியார் பிடியில் சிக்கி தவிக்கும் வேல்ராம்பட்டு ஏரியை மீட்டு மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வலியுறுத்தி புதுச்சேரி திமுகவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.
புதுச்சேரியில் குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஆதாரமாக மாநில முழுவதும் 84 ஏரிகள் உள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி கிராமம் மற்றும் நகர பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் .
ஆனால் சமீப காலமாக புதுச்சேரி நகரத்தின் குடிநீர் ஆதாரமாக திகழும் வேல்ராம்பட்டு ஏரி சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
இதனை மீட்க வேண்டும் என வலியுறுத்தி முதலியார் பேட்டை தொகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஆனால் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் ஏரியை மீட்க வேண்டும், மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்து குடிநீர் பயன்பாட்டுக்காக ஏரியை விட வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி திமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்கள்.
கடலூர்-புதுச்சேரி சாலை மரப்பாலம் சந்திப்பில் நடைபெறும் போராட்டத்தில்
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தலைமை தாங்கினார். திமுக அமைப்பாளர் சிவா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், தொகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் வேல்ராம்பட்டு ஏரியை உடனடியாக மீட்டு குடிநீரின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இந்த போராட்டம் குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கூறும் போது..
புதுச்சேரியின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் வேல்ராம்பட்டு ஏரியில் கழிவுநீர் கலந்து மாசடைந்து உள்ளது.
25 ஆண்டுகள் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து மீன்கள் வளர்த்து அதை பிடிப்பதற்காக தண்ணீரை இறைத்து வீணாக்கி வருகிறார்.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவே சமூகவிரோதிகளிடமிருந்து வேல்ராம்பட்டு ஏரியை மீட்டு மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கூறிய அவர் இந்த கோரிக்கை நிறைவேறும் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தார்.