in

புதுச்சேரி சிறையில் உள்ள 146 கைதிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர்


Watch – YouTube Click

புதுச்சேரி சிறையில் உள்ள 146 கைதிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பல்வேறு திட்டங்கள் சிறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைதிகள் மூலம் தோட்டம் அமைப்பு விவசாயம், கால்நடை வளர்ப்பு, உடற்பயிற்சி கூடம், யோகா, நடனம் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிறையில் உள்ள கைதிகள் இறக்கும் போது தங்களின் உடல் உறுப்புகளை தானம் வழங்க முன் வந்தனர், இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை மேற்கொண்டது.

ஜிப்மர் மருத்துவக் குழு சிறை கைதிகளை பரிசோதித்து 57 தண்டனை கைதிகளும் 89 விசாரணை கைதிகள் சிறை ஐஜி ரவி தீப்சிங் சாகர் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்பட 150 பேர் தங்களின் உடல் உறுப்புகளை தானம் வழங்கி ஒப்புதல் அளித்தனர்.

அதற்கான படிவங்களை சமர்ப்பித்தனர் உடல் உறுப்பு தானம் வழங்கி கைதிகளுக்கு தானம் வழங்குவதற்கான அடையாள அட்டை ஜிப்பர் மூலம் வழங்கப்பட்டது….


Watch – YouTube Click

What do you think?

மேட்டூரில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பிப்ரவரி 3ஆம் தேதி சாலை மறியல்

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டி. அன்பழகன் பேச்சு