in

புதுச்சேரியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் அரசு


Watch – YouTube Click

புதுச்சேரியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் அரசு

 

புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழக போலீசருடன் புதுச்சேரி போலீசார் இணைந்து செயல்பாடு உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி காவல்துறையில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான 500 காலி பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்காக விண்ணப்பங்களை பெறப்பட்டது.

அதன்படி 20135 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான உடற்பகுதி தேர்வு புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடற்பயிற்சி தேர்வை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் காவலர்களுக்கான பதவி உயர்வு மற்றும் கருணை அடிப்படையில் வேலை போன்ற காவலர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீசார் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் இதனால் சட்ட ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க தமிழக போலீசருடன் குழுவாக இணைந்து செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் மாநிலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை சரி செய்யப்படஉள்ளது அதேபோன்று காவல் நிலையங்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களிலும் மூன்று கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா கொடுக்கப்பட உள்ளது.

இதற்கான கோப்புகள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் சிறப்புகள் என்ன?

முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்