75 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற உலக சாதனை
புதுச்சேரியில் 75 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வு. இயல், இசை, நாடகம், நாட்டியம் மூலம் மது, போதை, புகை ஒழிப்பு, ரத்த தானம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு.
இயல்,இசை,நாடகம்,நாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்*
புதுச்சேரி அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில் 75-வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மத நல்லிணக்கம், மனித வள மேம்பாடு,மது, போதை, புகை ஒழிப்பு, ரத்ததானம், கண் தானம் உடல் உறுப்பு தானம் மற்றும் உலக அமைதி வேண்டி 75 மணி நேர உலக சாதனை நிகழ்வு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்க நிறுவனர் கலைமாமணி டாக்டர் இரா.தமிழ்வாணன், தலமையில் 29ஆம் தேதி தொடங்கிய உலக சாதனை நிகழ்வில் இயல், இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம், மற்றும் நாட்டுப்புற கலைகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
75 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வு இன்று நிறைவடைந்தது. இதில் பங்கு பெற்ற கலைஞர்களை ஊக்குவித்து பாராட்டு வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சபாநாயகர் செல்வம் துணை சபாநாயகர் ராஜவேல் ஆகியோர் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கினர்.
இதுகுறித்து கலைமாமணி விருதாளர் சங்க நிறுவனர் டாக்டர் தமிழ்வாணன் கூறும்போது….
75 ஆவது குடியரசு தின விழாவை பெருமையோடு கொண்டாடுகின்ற நிலையில் 75 மணி நேர உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம், அதன்படி இயல், இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புற கலைகளில், சிறந்து விளங்கக்கூடிய கலை மாமணிகளை கொண்டும் மத நல்லிணக்கம் சமுதாய முற்போக்கு சிந்தனைகளை இளைஞர்களிடம் எடுத்துச் சென்றுள்ளோம்.
75 மணி நேர உலக சாதனை 29-ந் தேதி காலை 9:45 மணிக்கு தொடங்கி இன்று 12: 45 மணிக்கு நிறைவு செய்ததாக குறிப்பிட்ட அவர் இந்த உலக சாதனையை அசிஸ்ட் உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் செய்திருக்கிறது என்றும் இந்த நிகழ்வு கட்டாயம் ஒரு நல்ல விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் என்று நம்புவதாக தெரிவித்தார்.