in

புதுச்சேரியில் வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்ற பால் வைத்து பாசத்தைக் காட்டிய பொதுமக்கள்


Watch – YouTube Click

புதுச்சேரியில் வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்ற பால் வைத்து பாசத்தைக் காட்டிய பொதுமக்கள்

 

புதுச்சேரி அடுத்த மதுகடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதுரை முத்து விவசாயியான இவரது வீட்டில் விசில் சவுண்ட் போல் கேட்டு உள்ளது அப்போது உள்ளே சென்று பார்க்கும் போழுது சுமார் ஐந்து அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று மறைந்திருந்து.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர் கண்ணதாசன் வீட்டின் இடுக்குகளில் மறைந்திருந்த ஐந்து அடி நீளம் நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் போட்டு எடுத்துச் சென்றார்.

இதேபோன்று புதுச்சேரி மூலக்குளம் லூயிஸ் ரெட்டியார் தோட்டம் காந்தி என்பவர் வீட்டின் அருகே இறைத்தேடி திரிந்த சாரைபாம்பு ஒன்று வெளியில் கடந்த மீன்பிடி வலையில் சிக்கிக் கொண்டது.

இதனால் அந்த பாம்பால் எங்கும் நகர முடியாமல் அதே இடத்தில் பல மணி நேரம் சிக்கித் தவித்தது இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் அதுவரை அந்த பாம்புக்கு ஏதும் ஆகிவிடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்காக ஒரு பாத்திரம் முழுவதும் பாலை கொண்டு வந்து வைத்து பாம்பை பால் குடிக்க வைத்தனர்.

அப்போது பாம்பும் பாத்திரத்தில் உள்ள பாலின் உள்ளே தலையை வைத்து படி பல வெகு நேரம் இருந்தது இப்போது குடியிருந்த மக்கள் பாம்பும் பால் குடித்த படியே இருந்தது இதனை அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் வலையில் சிக்கிய பாம்பை லாவகமாக உயிருடன் மீட்டு பிடித்துச் சென்றனர்.

வலையில் சிக்கிய பாம்பிற்கு உயிர் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சிய பொதுமக்கள் பாம்புக்கு பால் வைத்து பாசத்தைக் காட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

அபுதாபியில் முதல் இந்து கோவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

நாங்களும் அரசியல் காட்சி ஆரம்பிப்போம்..ஆம்…மா.. ஆனா எப்போ ஆரம்பிப்பேன் எனக்கே தெரியாது