in

ஸ்ருதியை வைத்து என்ன..பா பண்ற லோகி… பதில் தெரியாம காண்டாவுது தல

ஸ்ருதியை வைத்து என்ன..பா பண்ற லோகி… பதில் தெரியாம காண்டாவுது தல

சில நாட்களாகவே சுருதிஹாசனும் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எல்லோர் மண்டைக்குள் புகுந்து குடையும் வண்டு போல் இருந்தது.

இந்நிலையில் லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்த புகைப்படம் ஒன்று நேற்று இணையதளத்தில் வைரலானது, லோகேஷ் கனகராஜ் தற்பொழுது தலைவரை வைத்து 171 என்ற படத்தை இயக்கும் பணியில் பரபரப்பாக இருக்கிறார்.

இந்த பணியின் ஊடே லோகேஷ் கனகராஜ் சில தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார், கருப்பு டோனில் லோகேஷ் கனகராஜ் மற்றும் சுருதிஹாசன் இருப்பதாக ஒரு புகைப்படம் இணையத்தில் நேற்று வெளியானது.

இணையவாசிகள் அதிகமாக கேட்ட கேள்வியே இது தான் லோகி என்னதான் பண்ணுகிறார் என்றும்’ ஒரு சிலரோ சுருதியை வைத்து லோகி ஷார்ட் பிலிம் எதாவது எடுக்கிறாரோ என்ற கேள்விகளும் அதிகமானது.

இந்நிலையில் அது சம்பந்தமான தகவல்கள் ஒன்று வெளியாகி இருக்கிறது, அதாவது காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பாடல் எடுக்கப்பட்டதாம் அந்த பாடலை சுருதிஹாசன் எழுதி, இயக்குவதாகவும் லோகேஷ் அந்த படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் இரண்டு நாட்களாக எடுக்கப்பட்ட இந்த பாடலின் சூட்டிங் நேற்று தான் முடிந்தது ஏற்கனவே துபாய் நிகழ்ச்சியில் ராஜ் கமல் நிறுவனத்தின் ஒரு பிராஜெக்ட்டில் சுருதி இருப்பதாகவும் கமல் அறிவித்தார்.

மேலும் ‘டெல்லு இஸ் த நியூ சொல்லு’ என தொடங்கும் இந்த பாடலை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக குறிப்பிட்டுள்ளார், அப்பாடா கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதே என்ற சந்தோஷத்தில் இணைய வாசிகள் மலையின் உயரம் மலைக்குத் தெரியாதா இணையவாசிகளே.

What do you think?

மெல்போன் திரைப்பட விழாவிற்கு மாமனிதன் படம் தேர்வு … மாமனிதன் தலை நிமிர்ந்து நிற்கிறார்

ஹேமமாலினி மகள் இஷா தியோல் திருமண பந்தம் முறிந்தது… காரணம் தெரியாமல் திணறும் பாலிவுட் பிரபலங்கள்