முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா
சந்திப்பு…
பேச்சுவார்த்தையே இல்லை..தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்…மேலிட பொறுப்பாளர் சுரானா… வெகுவிரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்… அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..
புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக போட்டியிடுமா…என்.ஆர்.காங் கட்சி போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு என்ஆர்.காங் ஆண்டு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, கூட்டணி வேட்பாளரின் வெற்றி பாடுபடுவோம் என கூறியதால் பாஜக போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
இதனையடுத்து பாஜக மேலிட பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானா முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்தார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ கல்யாண சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
அரை மணிநேரம் நடந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக
மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் பாஜக தயாராகி வருகிறது . புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக உள்ளதால் இந்த தொகுதிக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பேச்சு வார்த்தையே இல்லை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் என்றார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தலைவராக முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். அதனால் அவரை சந்தித்து பேசி வருகிறோம். வெகு விரைவில் வேட்பாளரை கூட்டணி கட்சித் தலைவர் அறிவிப்பார். ஏற்கனவே முதலமைச்சரை சந்தித்து பேசி உள்ளோம். மீண்டும் சந்திப்போம். தேர்தலில் வெற்றி பெறும் வியூகங்களை அமைப்போம் என கூறினார்.
பாஜகவில் வேட்பாளர் இல்லையா…? என கேள்விக்கு அதிகப்படியானோர் பாஜகவில் போட்டியிட சீட்டு கேட்டுப்பதாகவும் … வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் இல்லை விரைவில் தலைவர் அதனை அறிவிப்பார் என நமச்சிவாயம் தெரிவித்தார்.