10 வயது சிறுவன் எழுதிய ஹியூமனிட்டி வின்ஸ் புத்தகம்
10 வயது சிறுவனால் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை பெருவெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800 பயணிகளுடன் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னணியை கொண்டு ஹியூமனிட்டி வின்ஸ் என்ற தலைப்பில் உருவாக்கிய ஆங்கில புத்தகம் நெல்லை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு புத்தகத்தை வெளியிட நெல்லை மாவட்ட ஆட்சியர் அதனைப் பெற்றுக் கொண்டார்.
நெல்லையை சேர்ந்த மென்பொருள் நிறுவனர் விக்னேஷ் அண்ணாமலை என்பவரின் 10 வயது மகன் கவின் விக்னேஷ் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெருவெள்ளம் உள்ளிட்ட சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்த்து வேதனை அடைந்துள்ளார் மேலும் மழை பெரு வெள்ளத்தில் திருச்செந்தூரில் 800 பயணிகளுடன் இருந்து புறப்பட்டு தண்டவாள அரிப்பு காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கித் துவைத்த ஸ்ரீவைகுண்டம் கிராம மக்கள் உடனடியாக உணவு உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து உதவிய மனிதநேய செயல் குறித்தும் தொலைக்காட்சிகளில் பார்த்து எரிந்துள்ளார் மேலும் மழை பெரு வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிக்கரம் நீட்டிய மனிதநேயமிக்க செயல் மாணவனை பெரிதும் சிந்திக்க வைத்துள்ளது இந்த நிலையில் இந்த சம்பவங்களை மனதில் வைத்து ஹியூமானிட்டி வின்ஸ் என்ற தலைப்பில் ஆங்கில புத்தகம் ஒன்றை அந்த மாணவன் எழுதியுள்ளார் புத்தகம் முழுதும் முடிவு பெற்ற நிலையில் புத்தகத்தை வெளியிட பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்த நிலையில் நெல்லையில் நடந்து வரும் பொருநை புத்தக திருவிழாவில் வெளியிடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்கப்பட்டது இதனை தொடர்ந்து நெல்லை புத்தக திருவிழாவில் 10 வயது மாணவன் கவின் விக்னேஷ் எழுதிய புத்தகம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது புத்தகத்தை ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு வெளியிட நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் கவிஞர் யுகபாரதி ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயில் சிக்கிய போது பணியில் இருந்த நிலைய மேலாளர் ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வரலாறு காணாத கன மழை பெரு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு உதவி கரம் நீட்டிய மனிதநேயமிக்க செயல் 10 வயது மாணவனை எழுத்தாளராக மாற்றி உள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது