பாஜக சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இளைஞர்கள் படுகாயம் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் இறுதியில் நடந்த ட்விஸ்ட் – பாஜக சார்பில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் நகர் மற்றும் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சாலை பாதுகாப்பு குறித்து பாஜகவினர் விளக்கி பேசினர். அதனைத் தொடர்ந்து கரகாட்ட கலைஞரின் மெய்சிலிர்க்க வைக்கும் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் கண்ணை வைத்து குண்டூசியை எடுத்த நிகழ்வும், டம்ளரின் மீது ஏறி நின்று கரகாட்டம் ஆடிய நிகழ்வும் காண்போரை கைதட்டி ரசிக்க வைத்தது. அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது இந்த விபத்தில் இளைஞர்கள் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது
அங்கிருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் அழையுங்கள் என கத்திய உடனே 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த இளைஞர்களை பரிசோதத்த பின் ஆம்புலன்ஸ்சில் அந்த இளைஞர்கள் ஏற்றப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீரென பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவை அனைத்தும் அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதி என அதன் பின்னரே தெரிய வந்தது ஹெல்மெட் அணியாமல் சென்றால் இது போன்று தலையில் காயங்கள் ஏற்படுத்தும் உயிரிழப்புகளை உண்டாக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு நடத்தி காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எமதர்மன் வேடமணிந்த நபர் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி அவர்கள் மீது பாசக்கயிறு வீசுவது போலவும் உடனடியாக அங்கு அயோத்தி ராமர் வந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கி அவர்கள் உயிரை காப்பாற்றுவது போலவும் நிகழ்ச்சி அரங்கேறியது .
மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாஜகவினர் இலவச ஹெல்மெட் வழங்கினர். மாவட்ட மகளிர் அணி
ஏற்பாட்டில் முழுவதும் வித்தியாசமாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய பாஜக நிர்வாகிகள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.