புதுச்சேரியில் 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.ஒரு லட்சம் செடி,மரக்கன்றுகள் விற்பனை இலக்கு
புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா எனும் 34வது மலர், காய், கனி கண்காட்சி தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. தாவரவியல் பூங்காவில் நடைபெறும் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.சபாநாயகர் செல்வம்,வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் வேளாண்மை, தோட்டக்கலை, அதனை சார்ந்தை நிறுவனங்கள், தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு முறைகள், எந்திரங்கள், புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்களை அரங்குகளாக அமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் விழாவின் ஒரு பகுதியாக கொய்மலர்கள், தொட்டி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறிகள், பழ வகைகள், தென்னை, மூலிகை செடிகள், பழ தோட்டங்கள், காய்கறி சாகுபடி வயல்கள், அலங்கார தோட்டம், மாடி தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம், ரங்கோலி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.மானிய விலையில் உயர் ரக நடவுக்கன்றுகள், தனியார் நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள், உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன..
இவ்விழாவில் பொதுமக்களுக்காக மலர்ப்படுக்கை மற்றும் புல்வளாகத்தில் மலர்களின் அணிவகுப்பு, பாரத மாதா சிலை, இசை நடன நீரூற்று, சிறுவர் உல்லாச ரயில் ஆகியவை இடம் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலை உபகரணங்கள், பழம் மற்றும் காய்கறி நாற்றுகள், உரங்கள், ஆகியவற்றின் விற்பனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு, வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைப் பகுதிக்கு ஏற்ப உருவாக்கியுள்ள KKL (R) 2 என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டது.